சனி, 29 ஜூலை, 2017

களிமண்ணில் பிறந்த சித்திரம் - இது
மழலைகள் படைத்த விசித்திரம் !!

 சனிக்கிழமை (29/07/2017) தெருவிளக்கு இரவுப்பள்ளியில் "கலை சார்ந்த கற்றம்" நடைபெற்றது.

கல்லிலே கலைவண்ணம் கண்டோம் (நம் முன்னோர்கள்) !
களிமண்ணிலே சிலைவண்ணம் காண்போம் ! என களிமண்ணில் விரும்பிய உருவங்கள் வடிப்பதே தெருவிளக்கு இரவுப்பள்ளியின் இந்த வார கலை சார்ந்த கற்றலின் முயற்சி.
பொம்மைகள் செய்ய களிமண் தேவை, தேடிச்சென்று எடுத்துவந்தோம்...
களிமண்ணை பார்த்ததும் மகிழ்ச்சி குழந்தைகளுக்கு., இன்னும் சற்று நேரத்தில் தாங்கள் எல்லாம் ஒரு படைப்பாளிகளாக மாறப்போகின்றோம் என்பதை நினைத்து.
ஒவ்வொரு குழந்தைகளின் கைகளில் கிடைத்த களிமண் சிறிது நேரத்திற்குள்ளே வித வித பொம்மைகளாக மாறியது. இதைத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாததால் ஒவ்வொருவரிடமும் கற்பனை ஊற்றெடுத்தது. பழங்கள், காய்கள், மேசை, தொட்டி, சட்டி, இப்படி வரிசை நீண்டுடது. ஒருசிலர் மட்டை பந்து வீரர்களை உருவமாக வடித்தார்கள். மேலும் தனது கூட்டில் அமர்ந்தவாறு காட்சியளித்த பறைவைகளின் உருவத்தையும் சிலையாக வடித்தார்கள். இவற்றை கண்டு ஆர்வத்தில் துடித்த எனது கரங்கள் பிசைந்த களிமண் "டைனோசர்" பொம்மையை படைத்தது. இங்கு குழந்தைகள் படைத்த உருவங்கள் அனைத்தும் அவர்களின் கற்பனை படைப்பில் பிறந்தவையே.
 குழந்தைகளின் கற்பனை வளத்தையும், உருவ வடிவமைப்பின் நேர்த்தியையும் வளப்படுத்தும் இந்த "களிமண்" எங்களின் "கல்விமண்" ஆகும்.

- தெருவிளக்கு
   7598479285




y






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக